Is ivermectin effective for COVID-19?

Is ivermectin effective for COVID-19?

English
Is ivermectin effective for COVID-19?

Key messages

We found no evidence to support the use of ivermectin for treating or preventing COVID-19 infection, but the evidence base is limited.Evaluation of ivermectin is continuing in 31 ongoing studies, and we will update this review with their results when they become available. 

What is ivermectin?

Ivermectin is a medicine used to treat parasites such as intestinal parasites in animals and scabies in humans. It is cheap and is widely used in regions of the world where parasitic infestations are common. It has few unwanted effects. 

Tests in the laboratory show ivermectin can slow the reproduction of the COVID-19 (SARS-CoV-2) virus but such effects would need major doses in humans. Medical regulators have not approved ivermectin for COVID-19. It should only be used as part of well-designed studies (called randomized controlled trials) evaluating potential effects. 

What did we want to find out?

We wanted to know if ivermectin reduces death, illness, and length of infection in people with COVID-19, or is useful in prevention of the disease. We included studies comparing the medicine to placebo (dummy treatment), no treatment, usual care, or treatments for COVID-19 that are known to work to some extent, such as remdesivir or dexamethasone. We excluded studies that compared ivermectin to other drugs that do not work, such as hydroxychloroquine, or that are not known to be effective against COVID-19.

We evaluated the effects of ivermectin in infected people on:

  • people dying;
  • whether people's COVID-19 symptoms got better or worse;
  • unwanted effects;
  • hospital admission or time in hospital;
  • viral clearance.

For prevention, we sought the effect on preventing COVID-19 and SARS-CoV-2 infection.

What did we do? 

We searched for randomized controlled trials that investigated ivermectin to prevent or treat COVID-19 in humans. People being treated with ivermectin had to have laboratory-test confirmed COVID-19 and be receiving treatment in hospital or as outpatients.

We compared and summarized the results of the studies and rated our confidence in the evidence, based on common criteria as to how reliable the evidence is.

What did we find? 

We found 14 studies with 1678 participants that investigated ivermectin compared to no treatment, placebo, or usual care.

For treatment, there were nine studies of people with moderate COVID-19 in hospital and four of outpatients with mild COVID-19. The studies used different doses of ivermectin and different durations of treatment.

One study investigated ivermectin to prevent COVID-19.

We also found 31 ongoing studies, and there are 18 studies still requiring clarification from the authors or not yet published.

Main results 

Treating people in hospital with COVID-19

We don't know whether ivermectin compared with placebo or usual care, 28 days after treatment:

  • leads to more or fewer deaths (2 studies, 185 people);
  • worsens or improves patients' condition assessed by need for ventilation (2 studies, 185 people) or oxygen (1 study, 45 people);
  • increases or reduces unwanted events (1 study, 152 people).

Seven days after treatment, we don't know if ivermectin:

  • increases or reduces negative COVID-19 tests (2 studies, 159 people).

Ivermectin compared to placebo or usual care may make little or no difference to improving patients' condition 28 days after treatment (1 study, 73 people) or to length of hospital stay (1 study, 45 people).

Treating outpatients with COVID-19

We don't know whether ivermectin compared with placebo or usual care:

  • leads to more or fewer deaths 28 days after treatment (2 studies, 422 people);
  • worsens or improves patients' condition 14 days after treatment assessed by need for ventilation (1 study, 398 people);
  • increases or reduces negative COVID-19 tests seven days after treatment (1 study, 24 people).

Ivermectin compared to placebo or usual care may make little or no difference to improving outpatients' condition 14 days after treatment (1 study, 398 people) or to the number of unwanted events 28 days after treatment (2 studies, 422 people).

No studies looked at hospital admissions in outpatients.

Preventing COVID-19

We don't know whether ivermectin leads to more or fewer deaths compared with no drug (1 study, 304 people); no participant died 28 days after the drug. This study reported results for development of COVID-19 symptoms (but not confirmed SARS-CoV-2 infection) and unwanted events, but in a way that we could not include in our analyses. This study did not look at hospital admissions.

What are the limitations of the evidence?

Our confidence in the evidence is very low because we could only include 14 studies with few participants and few events, such as deaths or need for ventilation. The methods differed between studies, and they did not report everything we were interested in, such as quality of life. 

How up to date is this evidence?

The evidence is up to date to 26 May 2021.

 

Tamil

எளிய மொழியில் சுருக்கம்
கோவிட் -9 ஐத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ஐவர்மெக்டின்

COVID-19 க்கு ஐவர்மெக்டின் பயனுள்ளதா?

முக்கியச் செய்திகள்

கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுப்பதற்காக ஐவர்மெக்டின் பயன்படுத்துவதற்கு ஆதரவாக எந்த ஆதாரமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அடிப்படை ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன.

31 ஆய்வுகளில் ஐவர்மெக்டின் மதிப்பீடு தொடர்கிறது. இந்த மதிப்பீட்டை அவை கிடைக்கும்போது அவற்றின் முடிவுகளால் புதுப்பிப்போம்.

ஐவர்மெக்டின் என்றால் என்ன?

ஐவர்மெக்டின் என்பது விலங்குகளில் குடல் ஒட்டுண்ணிகளுக்கும் மனிதர்களின் சிரங்கு போன்ற ஒட்டுண்ணிகளுக்கும் சிகிச்சையளிக் கப் பயன்படுத்தப்படும் மருந்து. இது மலிவானது. ஒட்டுண்ணித் தாக்குதல்கள் மிகுதியாக இருக்கும் உலகின் பகுதிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சில தேவையற்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

ஐவர்மெக்டின் COVID-19 (SARS-CoV-2) வைரஸின் இனப்பெருக் கத்தை மெதுவாக்கும் என்று ஆய்வகச் சோதனைகள் காட்டுகின்றன. ஆனால் இதுபோன்ற விளைவுகள் உண்டாக மனிதர்களுக்கு அதிக அளவு தேவைப்படும். மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் கோவிட் -19 க்காக ஐவர்மெக்டினை அங்கீகரிக்கவில்லை. இது, சாத்தியமான விளைவுகளை மதிப்பிடுகின்ற, (சீரற்ற கட்டுப் பாட்டுச் சோதனைகள் எனப்படும்) நன்கு வடிவமைக்கப் பட்ட ஆய்வுகளின் ஒருபகுதியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

நாம் என்ன கண்டுபிடிக்க விரும்பினோம்?

கோவிட் -19 உள்ளவர்களுக்கு இறப்பு, நோய் மற்றும் நோய்த்தொற்றின் காலத்தை ஐவர்மெக்டின் குறைக்கிறதா அல்லது நோயைத் தடுப்பதற்குப் பயனுள்ளதாக உள்ளதா என்பதை அறிய விரும்பினோம். ரெசிடிவிர் அல்லது டெக்ஸாமெதாசோன் போன்ற, ஓரளவிற்கு வேலை செய்யக்கூடிய மருந்து, மருந்துப்போலிசிகிச்சை, வழக்கமான கவனிப்பு அல்லது கோவிட்-19 க்கான சிகிச்சைகள் ஆகியவற்றை ஒப்பிடும் ஆய்வுகளை நாங்கள் சேர்த்துள்ளோம். வேலை செய்யாத மற்ற மருந்துகளான ஹைட்ராக்ஸி குளோரோ குயின் போன்றவற்றை ஐவர்மெக்டினுடன் ஒப்பிடும் அல்லது கோவிட் -19 க்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று அறியப்படாத ஆய்வுகளை நாங்கள் விலக்கினோம்.

பாதிக்கப்பட்ட நபர்கள்மீது ஐவர்மெக்டினின் விளைவுகளை நாங்கள் மதிப்பீடு செய்தோம்:

- இறக்கின்ற மக்கள்;

-மக்களின் COVID-19 அறிகுறிகள் குணமாயினவா அல்லது மோசமாயினவா;

- தேவையற்ற விளைவுகள்;

- மருத்துவமனை அனுமதி அல்லது மருத்துவமனையில் இருந்த நேரம்;

- வைரஸ் இன்மை.

தடுப்புக்காக, COVID-19 மற்றும் SARS-CoV-2 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான விளைவை நாங்கள் நாடினோம்.

நாங்கள் என்ன செய்தோம்?

மனிதர்களில் கோவிட் -19 ஐத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க ஐவர்மெக்டினை ஆராய்ந்த சீரற்ற கட்டுப்பாட்டுச் சோதனைகளை நாங்கள் தேடினோம். ஐவர்மெக்டினுடன் சிகிச்சையளிக்கப்பட்ட மக்கள் ஆய்வக-சோதனை உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 ஐக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் மருத்துவமனையில் அல்லது வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களையும்.

நாங்கள் ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டுத் தொகுத்து, சான்றுகள் எவ்வளவு நம்பகமானவை என்ற பொதுவான அளவுகோல்களின் அடிப்படையில், அவற்றின்மீதான நம்பகத்தன்மையை மதிப்பிட்டோம்.

 

நாங்கள் என்ன கண்டுபிடித்தோம்?

சிகிச்சையின்மை, மருந்துப்போலி அல்லது வழக்கமான கவனிப்புடன் ஒப்பிட்டு, ஐவர்மெக்டின் விளைவுகளை 1678 பங்கேற்பாளர்களுடன் 14 ஆய்வுகள்மூலம் நாங்கள் கண்டறிந்தோம்.

சிகிச்சைக்காக, மருத்துவமனையில் மிதமான கோவிட் -19 நோயாளி களும் இலேசான கோவிட் -19 உள்ள நான்கு புறநோயாளிகளும் இருந்தனர். இவர்கள் பற்றிய ஒன்பது ஆய்வுகள் இருந்தன. வெவ்வேறு அளவு ஐவர்மெக்டினையும் சிகிச்சைக்கு வெவ்வேறு காலங்களையும் இந்த ஆய்வுகள் பயன்படுத்தின.

ஒரு ஆய்வுக்கல்வி கோவிட் -19 ஐத் தடுக்க ஐவர்மெக்டின் உதவுமா என ஆய்வு செய்தது.

31 தொடர்ச்சியான ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். மேலும் 18 ஆய்வுகள் ஆசிரியர்களிடமிருந்து தெளிவுபடுத்தப்படாமலோ இன்னும் வெளியிடப்படாமலோ உள்ளன.

முக்கிய முடிவுகள்

COVID-19ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தல்

சிகிச்சைக்கு 28 நாட்களுக்குப் பிறகு, மருந்துப்போலி அல்லது வழக்கமான கவனிப்புடன் ஐவர்மெக்டின் சரிவர நிற்கிறதா என்பது எங்களுக்குத் தெரியாது:

  • அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இறப்புக்கு வழிவகுக்கிறதா என்பதும் (2 ஆய்வுகள், 185 பேர்) தெரியாது;
  • காற்றோட்டம் (2 ஆய்வுகள், 185 பேர்) அல்லது ஆக்ஸிஜன் (1 ஆய்வு, 45 பேர்) தேவை என மதிப்பிடப்பட்ட நோயாளிகளின் நிலையை மோசமாக்குகிறதா அல்லது மேம்படுத்துகிறதா என்பதும் தெரியாது.
  • தேவையற்ற நிகழ்வுகளை அதிகரிக்கிறதா அல்லது குறைக்கிறதா (1 ஆய்வு, 152 பேர்) என்பதும் தெரியாது.

சிகிச்சைக்கு ஏழு நாட்களுக்குப் பிறகு, ஐவர்மெக்டின் :

COVID-19 இன்மைச் சோதனைகளை அதிகரிக்கிறதா அல்லது குறைக்கிறதா (2 ஆய்வுகள், 159 பேர்) என்பது தெரியாது.

மருந்துப்போலி அல்லது வழக்கமான கவனிப்புடன் ஒப்பிடும்போது ஐவர்மெக்டின் சிகிச்சைக்கு 28 நாட்களுக்குப் பிறகு (1 ஆய்வு, 73 பேர்) அல்லது மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலத்திற்கு (1 ஆய்வு, 45 பேர்) நோயாளிகளின் நிலையை மேம்படுத்துவதில் சிறிது அல்லது எந்த வித்தியாசமும் இல்லையா என்பது தெரியாது.

COVID-19 ஆல் புறநோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தல்

மருந்துப்போலி அல்லது வழக்கமான கவனிப்புடன் ஐவர்மெக்டின் சமமாக உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது:

  • சிகிச்சைக்கு 28 நாட்களுக்குப் பிறகு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இறப்புக்கு வழிவகுக்கிறதா (2 ஆய்வுகள், 422 பேர்) என்பது தெரியாது;

காற்றோட்டம் தேவை என மதிப்பிடப்பட்ட சிகிச்சைக்கு 14 நாட்களுக்குப் பிறகு நோயாளிகளின் நிலையை மோசமாக்குகிறதா அல்லது மேம்படுத்துகிறதா (1 ஆய்வு, 398 பேர்) தெரியாது;

சிகிச்சைக்கு ஏழு நாட்களுக்குப் பிறகு COVID-19 இன்மைச் சோதனைகளை அதிகரிக்கிறதா அல்லது குறைக்கிறதா (1 ஆய்வு, 24 பேர்) என்பதும் தெரியாது.

மருந்துப்போலி அல்லது வழக்கமான கவனிப்புடன் ஒப்பிடும்போது ஐவர்மெக்டின் சிகிச்சைக்கு 14 நாட்களுக்குப் பிறகு (1 ஆய்வு, 398 பேர்) அல்லது சிகிச்சையின் 28 நாட்களுக்குப் பிறகு தேவையற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையில் (2 ஆய்வுகள், 422 பேர்) வெளிநோயாளிகளின் நிலையை மேம்படுத்துவதில் சிறிது அல்லது எந்த வித்தியாசமும் இல்லை.

புறநோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது குறித்து எந்த ஆய்வும் இல்லை.

கோவிட் -19 ஐத் தடுத்தல்.

மருந்து இல்லாமல் ஒப்பிடும்போது ஐவர்மெக்டின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மரணத்திற்கு வழிவகுக்கிறதா என்பது எங்களுக்குத் தெரியாது (1 ஆய்வு, 304 பேர்); மருந்து உட்கொண்ட 28 நாட்களுக்குப் பிறகு பங்கேற்பாளர்கள் யாரும் இறக்கவில்லை. இந்த ஆய்வு COVID-19 அறிகுறிகளின் (ஆனால் உறுதிப்படுத்தப்படாத SARS-CoV-2 தொற்று) மற்றும் தேவையற்ற நிகழ்வுகளின் வளர்ச்சிக்கான முடிவுகளை அறிவித்தது. ஆனால் எங்கள் பகுப்பாய்வுகளில் எங்களால் சேர்க்க முடியாத வகையில் அது இருந்தது.. இந்த ஆய்வு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நோயாளிகளைப் பார்க்கவில்லை.

சான்றுகளின் குறைபாடுகள் என்ன?

சான்றுகள் மீதான எங்கள் நம்பிக்கை மிகக் குறைவு, ஏனென்றால் சில பங்கேற்பாளர்களுடன் 14 ஆய்வுகள் மற்றும் இறப்புகள் அல்லது காற்றோட்டம் தேவை போன்ற சில நிகழ்வுகளை மட்டுமே நாங்கள் சேர்க்க முடியும். ஆய்வுகளுக்கு இடையில் முறைகள் வேறுபடுகின்றன. மேலும் எங்களுக்கு ஆர்வமுள்ள, வாழ்க்கைத் தரம் போன்ற அனைத்தையும் அவை தெரிவிக்கவில்லை.

இந்த ஆதாரம் எவ்வளவு மேம்படுத்தப்பட்டுள்ளது?

இந்த ஆதாரம் 26 மே 2021 வரை திட்டமாக உள்ளது.